full screen background image

புனே உலகத் திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் திரையிடப்படுகிறது!

புனே உலகத் திரைப்பட விழாவில் ‘காதல் என்பது பொதுவுடமை’ படம் திரையிடப்படுகிறது!

காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் 22-வது புனே உலகத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. 

மம்மூட்டி நடித்த காதல் தி கோர்’ திரைப்படத்தை இயக்கிய ஜியோ பேபி இந்தப் படத்தை வழங்க, மேன்கைன்ட் சினிமாஸ், நித்திஸ் பொரொடக்ஷன் மற்றும் சிம்மட்ரி சினிமாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தில் லிஜோ மோல், ரோகிணி, வினீத், கலேஷ் ராம் ஆனந்த், அனுஷா, தீபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைக்க, டேனி சார்லஸ் படத் தொகுப்பு செய்துள்ளார்.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இவர் லென்ஸ்’, ‘மஸ்கிடோபிலாஷபி’, ‘தலைக்கூத்தல்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்தக் காதல் என்பது பொதுவுடமை திரைப்படம் ஒரு நவீன காதல் கதையாகும்.

வரும் ஜனவரி 19 மற்றும் 21 தேதிகளில் இப்படம் புனே திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

ஏற்கனவே இப்படம் இந்தியன் பனோரமாவின் கோவா திரைப்பட விழாவிலும் தேர்வாகி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தக் காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் 22-வது புனே உலகத் திரைப்படவிழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. 

வரும் ஜனவரி 19 மற்றும் 21 தேதிகளில் இப்படம் புனே திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

ஏற்கனவே இப்படம் இந்தியன் பனோரமாவின் கோவா திரைப்பட விழாவிலும் தேர்வாகி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score