full screen background image

உறவு முறை மாறினால் ஏற்படும் விபரீதம்தான் ‘காசிமேடு கேட்’ திரைப்படம்!

உறவு முறை மாறினால் ஏற்படும் விபரீதம்தான் ‘காசிமேடு கேட்’ திரைப்படம்!

பணத்திற்கு ஆசைப்பட்டு உறவு முறை மாறினால் நிகழும் விபரீத விளைவுதான் காசிமேடு கேட்’ திரைப்படம்.

ஒய்.எம்.ஆர். கிரியேசன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் வேணுகோபால், யஷ்வன், சுரபி திவாரி, கிஷ்கை சவுத்ரி, ஏபிஎம்.சாய்குமார், பர்த்து, ராகம்மா ரெட்டி, கங்காதர், அனுஷா ஜெயின், சுதிக்ஸ் ஜகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஒய்.ராஜ்குமார் இயக்கியுள்ளார். யோகி ரெட்டி கேமராவையும், சிவ சர்வாணி படத் தொகுப்பையும், விங் சுன் அன்ஜி சண்டைப் பயிற்சியையும், அனீஷ் நடன பயிற்சியையும், ஜெ. திம்மராயுடு  இணை தயாரிப்பையும், பைய வரப்பு ரவி வசனத்தையும், பாஸ்கர பட்லா – மணிகண்ட சங்கு பாடல்களையும், என்.எஸ்.பிரசு இசையையும் கவனிக்கின்றனர். பத்திரிகை தொடர்பு – விஜயமுரளி.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ஒய்.ராஜ்குமார் பேசும்போது, “அண்ணன், அண்ணி, தம்பி மூவரும் வசிக்கும் இடத்தில் ரவுடிகளின் அட்டகாசத்தால் அந்த இடத்தில் வசிப்பவர்கள் ஒருவித திகிலுடனே வாழ்கின்றனர்.

அண்ணனின் அபரிதமான பணத்தை அபகரிக்க ரவுடி கும்பலுடன் தம்பி சேருகிறான். இந்தக் கூட்டு சதியில் அண்ணியும் ஈடுபட… அதன் பிறகு நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்கள்தான் இந்த காசிமேடு கேட்’ படத்தின் மையக் கரு…” என்றார்.

ஹைதராபாத், பெங்களூர், சென்னையில் காசிமேடு மற்றும் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் போன்ற பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர்.

Our Score