‘காஷ்மோரா’வில் நயன்தாரா வரும் காட்சிகள் அமர்க்களப்படுமாம்..!

‘காஷ்மோரா’வில் நயன்தாரா வரும் காட்சிகள் அமர்க்களப்படுமாம்..!

வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் ‘காஷ்மோரா’ படத்தின் மீதான ஆர்வம் திரைத்துறையினரையும் தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களிடையே அதிகரித்தபடியேதான் உள்ளது.

‘பாகுபலி’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பை மையமாக வைத்து அதே பாணியில் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘காஷ்மோரா’ படத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு இணையாக நயன்தாரா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ், இசை - சந்தோஷ் நாராயணன். படத்தொகுப்பு - சாபு ஜோசப், கலை – ராஜீவன். இயக்கம் – கோகுல்.

"படத்தில் நயன்தாரா நடிக்கும் பகுதி வெறும் அரைமணி நேரம்தான். ஆனால் அதுதான் அந்தப் படத்திற்கே உயிரான இடம். அந்த அரைமணி நேரமும் ரசிகர்கள் திரையை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பார்கள். இதற்கு நான் கியாரண்டி.." என்கிறார் இயக்குநர் கோகுல்.

இந்தப் படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. போர்க்கள காட்சிகள் நிறைய இருப்பதால்தான் இந்த சான்றிதழ் என்பதை புரிந்து கொண்டு அமைதியாக வாங்கிக் கொண்டதாம் தயாரிப்பாளர் தரப்பு.

இதன் காரணமாய் வரிவிலக்கு கிடைக்காது என்றாலும், ரசிகர்களின் பேராதரவு இருப்பதால் படத்தை அது எந்தவிதத்திலும் பாதிக்காது என்று தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

தமிழில் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸும், தெலுங்கில் பிவிபி நிறுவனமும் வெளியிடுகின்றன.