பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’ அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமிபிரியா, அபிநயா உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் தாங்கி வருகிறது.
‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைத்துள்ளார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.
தற்போது இந்தக் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
“சாந்தீ… பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?” எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது.
சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும் சிரிப்பு வர வைக்கும் வகையிலும் வெளிப்படுத்தும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர், பணத் தேவை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை இன்றைய கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் சொல்கிறது.
மனைவியோடும் மகனோடும் ஒரு குடும்பத் தலைவராக காட்டப்படும் சமுத்திரக்கனி, பின்னர் வெளிநாடுகளில் தனியாக இருப்பது போல் டீசர் காட்டுகிறது கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகளை டீசர் ஏற்றுகிறது.
“பணக்காரன் ஆகணும்னா பணக்காரனா வாழ கத்துக்கணும், காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணு” என்று சமுத்திரக்கனி சொல்வதோடு நிறைவடையும் டீசர் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.
‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் டீசர் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் திரைப்படம் அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
Carmeni Selvam – A Contemporary Drama Rooted in Money, Family, and Modern Aspirations, Releasing This Diwali on October 17, 2025
Pathway Productions has unveiled the teaser of Carmeni Selvam. The film brings together a strong ensemble cast – Samuthirakani, Gautham Vasudev Menon, Lakshmi Priyaa Chandramouli, and Abhinaya, and a theme that feels strikingly relevant to today’s times—setting the stage for what could become a talking point this Diwali.
A Teaser That Sparks Curiosity on Money and Choices:
The teaser begins with a voiceover from Samuthirakani: “There are many means to make money.” From there, different voices chime in with contradictory advice—overspending, bold loans, cryptocurrency bets, and even dubious shortcuts—offering a witty reflection of how money and success are viewed in modern society.
Rather than presenting a heavy-handed take, the teaser hints at a film with a light tone, sprinkled with irony and humor, making its social observations both sharp and entertaining. It suggests that the story could revolve around the financial needs and decisions that shape people’s lives, a theme that resonates strongly in today’s credit-based economy and EMI driven lifestyle.
Visually, the teaser showcases Samuthirakani as a family man with Lakshmi Priyaa Chandramouli as his wife and a young son. In contrast, glimpses of him abroad, seemingly alone, raise questions about his journey. Gautham Vasudev Menon’s presence in an undisclosed role further adds to the intrigue, leaving audiences speculating about his importance in the story.
The teaser concludes with Samuthirakani’s memorable line: “If you want to be rich, learn to spend like a rich man. If you don’t have the money, borrow and spend.” —a provocative note that lingers with the audience long after the teaser ends.
A Cast and Crew That Raise Expectations:
With an ensemble of powerhouse performers — Samuthirakani, Gautham Vasudev Menon, Lakshmi Priyaa Chandramouli, and Abhinaya — the film promises to deliver compelling characters, brought alive through performances of intensity and depth.
The crew comprises Ram Chakri, who brings a fresh vision as both writer and director, and Yuvaraj Dakshan, whose cinematography delivers visuals as compelling as the story itself, with the music crafted by Music Cloud Technologies.
A Diwali Release to Watch Out For.
With its timely theme, relatable premise, and light yet thought-provoking tone, Carmeni Selvam is shaping up to be a film that will spark conversations this festive season. The makers’ decision to release the film on Diwali day speaks volumes about their confidence in the product and its ability to connect with audiences during one of the biggest movie-going weekends of the year.
Releasing in theatres on October 17, 2025, Carmeni Selvam positions itself as an entertainer that blends family dynamics with contemporary reflections on money and lifestyle.