காந்தர்வன் – திரை முன்னோட்டம்

காந்தர்வன் – திரை முன்னோட்டம்

தாமரை மூவீஸ் வழங்க சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காந்தர்வன்”.

இந்தப் படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நெல்லை சிவா, சபாபதி, ஆண்டமுத்து, வெள்ளை சுப்பையா, செல்லத்துரை, கிரேன் மனோகர், கோவை செந்தில்குமார், ரிஷா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் சலங்கைதுரை.  இவர் ஏற்கெனவே கரண் – வடிவேலு நடித்த ‘காத்தவராயன்’ வெற்றிப் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனர் பேசும்போது,  “காதல் கதையை கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம். இந்தப் படத்திற்காக சமீபத்தில்  கதிர் –  ஹனிரோஸ்  பங்கேற்ற ‘நெருப்பாய் நெருப்பாய்  தெரியுது  நிழலே’ என்ற பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. கிழக்குக் கடற்கரை சாலையில் துவங்கி பாண்டிச்சேரிவரை இந்த பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது.

கஞ்சா கருப்பு இந்த படத்தில் படு கஞ்சனான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்தப் பட ரிலீஸுக்கு  பிறகு கஞ்சா கருப்புவை,  ‘கஞ்ச கருப்பு’ என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு படத்தில் அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது. அதே மாதிரி ஹீரோ கதிர் நிச்சயம் பெரிய அளவிற்கு வரக்கூடிய நடிகராக இப்படம் மூலம் மாறுவார்…” என்று கூறினார் இயக்குனர்.

ஒளிப்பதிவு    –    அனில் கே.சேகர் ,

இசை   –   அலெக்ஸ் பால்

பாடல்கள்   –  கவிஞர் வாலி, விவேகா, முத்துவிஜயன், கவின்சம்பத்

கலை   –   எம்.ஏ. ராமதுரை

நடனம்  –   தினா

எடிட்டிங்   – எஸ்.எம்.வி.சுப்பு

ஸ்டண்ட்   – தீப்பொறி நித்யா

Our Score