full screen background image

பரத், சுரேஷ் மேனனின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காளிதாஸ்’ திரைப்படம்

பரத், சுரேஷ் மேனனின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காளிதாஸ்’ திரைப்படம்

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தினகரன், M.S.சிவநேசன் இருவரும் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’.

இந்தப் படத்தில் பரத், அன் ஷீத்தல், ஆதவ் கண்ணதாசன், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத் தொகுப்பை கவனிக்கிறார். திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் ஸ்ரீசெந்தில்.

இவர் ‘நாளைய இயக்குநர் சீசன்-3’-ல் கலந்து கொண்டு, இறுதி போட்டிவரை முன்னேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

_I7A8890

படம் பற்றி இயக்குர் ஸ்ரீசெந்தில் பேசியபோது, “சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில் நடிகர் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

முக்கியமான கேரக்டர்களில் ஆதவ் கண்ணதாசனும், சுரேஷ் மேனனும் நடித்திருக்கிறார்கள். பரத்திற்கு ஜோடியாக அன் ஷீத்தல் என்ற மலையாள நடிகையை அறிமுகம் செய்கிறோம்.

சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக தடைப்பட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள், வேலை நிறுத்தம் முடிவடைந்ததும் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நடிகர் பரத் டப்பிங் பேசி வருகிறார். விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும்…” என்றார்.

Our Score