சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகின்ற மே 9-ம் தேதி சென்னையில் நந்தனத்தில் உள்ள Y.M.C.A. மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
‘காலா’ படத்தினை நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷின் ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது. ‘கபாலி’ மற்றும் ‘மெட்ராஸ்’ பட புகழ் இயக்குநர் பா.ரஞ்சித் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்த இசை வெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது (Dopeadelicz & RAP குழு) இசைக் குழுவினருடன் இணைந்து ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.
வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ (DIVO) நிறுவனமும் இணைந்து ‘காலா’ படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினை நேரடியாக இணையத் தளங்களில் வெளியிட உள்ளனர்.
இசை வெளியீட்டு விழாவின் நேரலையை கீழ்கண்ட லிங்க்-களில் காணலாம்.
https://www.facebook.com/OfficialWunderbarFilms/
https://twitter.com/wunderbarfilms
https://www.youtube.com/wunderbarstudios