full screen background image

‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் காதல் கலந்த காமெடியாம்..!

‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் காதல் கலந்த காமெடியாம்..!

பிரபல தயாரிப்பாளர் சீ.வீ.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘காதலும் கடந்து போகும்.’ இந்தப் படத்தை அபி அண்ட் அபி பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது.

‘சூது கவ்வும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குநர் நலன் குமரசாமிதான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இதுவொரு கொரிய திரைப்படத்தின் கதையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, “இந்த ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் ஒரு காதல் கலந்த காமெடி படம். முழுக்க, முழுக்க காதல் கலந்த காமெடி படம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. ஒன்று காமெடி அதிகமாக இருக்கும்.. இல்லையென்றால் காதல் கலந்த காட்சிகள் அதிகமாக இருக்கும். இந்தப் படத்தில் இறுதிக் காட்சிகளுக்கு முன்புவரை காட்சிகளோடு இழையோடும் காமெடி இருந்து கொண்டே இருக்கும்.

‘சூது கவ்வும்’ படத்தின் கதைக்கு எதிர் திசையில் இப்படத்தின் கதையை அமைத்து அப்படத்தின் சாயல் இப்படத்தில் இல்லாதவாறு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் இப்படம் இருக்கும்.

‘சத்யா’ படத்தில் நடித்த சுந்தர் இப்படத்தில் கவுன்சிலராக நடித்துள்ளார். அவரிடம் பணியாற்றும் அடியாளாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ‘ப்ரேமம்’ படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில் அப்படத்தினில் ஒரு நாயகியாக நடித்திருந்த மடோனா செபஸ்டியன் இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் மடோனா இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஒரு முறை “என்னய்யா இந்த பொண்ணு இப்படி நடிக்கிறா” என்று விஜய் சேதுபதி பாராட்டினாராம்.

போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். படத்தின் 70% முதல் 80% காட்சிகள் நாயகன், நாயகி சம்பந்தப்பட்டே இருக்கும். நாயகன், நாயகி இருவருக்கும் எப்படி நட்பு உருவாகிறது என்பதுதான் கதையே.

தமிழ் சினிமாவில் உடனேயே நட்பும், காதலும் உருவாகி விடுவதுபோலத்தான் திரைக்கதை அமைப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஹீரோ-ஹீரோயின் இடையே நட்பு வளரும் காலகட்டத்தை படிப்படியாக காட்டியிருக்கிறார்கள். காட்சிகளில் நகைச்சுவை கலந்து அக்காட்சிகள் மூலமாக எவ்வாறு நட்பு உருவானது என்பதை பார்ப்பவர்கள் நம்புவது போல சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் இருவருக்குக்குள்ளும் காதல் வரும்போது படம் முடிவடைந்துவிடும். இப்படத்தில் காதல் தோல்வி எல்லாம் கிடையாது.

‘சூது கவ்வும்’ படத்தில் நயன்தாரா கோயில் கட்டும் காமெடி காட்சிகள் எல்லாம் படம் வந்தவுடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே போல இப்படத்தின் காமெடி காட்சிகளுக்கும் கிடைக்கும். 

இந்தப் படத்தில் 2 பாடல்கள், 2 சண்டை காட்சிகள் இருக்கிறது. ஒரு சண்டை காட்சியை ஒரே டேக்கில் எடுத்திருக்கிறார்கள். ஒரு கட்டிடத்திற்குள் விஜய் சேதுபதி தனது நண்பருடன் சென்று சண்டையிட்டு விட்டு மறுபடியும் கட்டிடத்தில் இருந்து வெளியே வந்து நடந்து போவார். இந்தக் காட்சி ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியை சண்டை பயிற்சியாளர்கள் ஹரி – தினேஷ் இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

இயல்பாக உங்களது வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள்.. அதில் காதல் தானாகவே வந்தால்.. வந்துவிட்டு போகட்டும் என்பதைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்..” என்றார் ஒரே மூச்சில்..!

Our Score