அது கா.க.போ., இது க.க.க.போ. – படத்தின் தலைப்புக்கு வந்த சோதனை..!

அது கா.க.போ., இது க.க.க.போ. – படத்தின் தலைப்புக்கு வந்த சோதனை..!

டிரெயிலர் வெளியாகி ஒரு நாள்தான் ஆச்சு. அதுக்குள்ள படத்தோட பெயருக்கே சர்ச்சை கிளம்பியிருச்சு..

‘சூது கவ்வும்’ இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் புதிய படம் ‘காதலும் கடந்து போகும்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் டிரெயிலர் நேற்று முன்தினம்தான் வெளியானது.

Kakakapo

இந்தப் படம் பற்றிய செய்திகளை கொடுக்கும்போது படத்தின் தலைப்பை முழுமையாக உச்சரிக்கவும், எழுதவும் சோம்பேறித்தனப்பட்டு படத்துடன் சம்பந்தப்பட்ட சிலர் கா.க.போ. என்று சுருக்கமாக குறிப்பிட்டனர்.

இந்தச் சுருக்கப் பெயரை அடியொற்றி ஒரு தமிழ்த் திரைப்படம் ஏற்கெனவே தயாரித்து முடிக்கப்பட்டு திரைக்கு வரும் ஜோரில் காத்திருக்கிறது. இந்தத் தகவல் இந்தப் படத்தின்  இயக்குநர் விஜய்க்கு தெரிய வர.. உடனடியாக பத்திரிகைகளுக்கு ஒரு செய்தியை தட்டிவிட்டுள்ளார்.

ka ka ka po still-1

அந்தச் செய்தியில், “நான்  ‘க க க  போ’ என்ற பெயரில் ஒரு தமிழ்த் திரைப்படத்தை இயக்கியுள்ளேன். இதில் பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்து, தற்பொழுது வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்திற்கும் ‘க க க  போ’ என பெயரிட்டு விளம்பரம் செய்கிறார்கள், இது எங்கள் திரைப்பட தலைப்பிற்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

எனவே பத்திரிகை நண்பர்கள் ‘க க க போ’ தலைப்பு எங்களுக்கே சொந்தம் என்பதையும், இந்தத் தலைப்பில் குழப்பம் வராமல் செய்திகளை வெளியிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

அது ‘கா.க.போ.’ என்பதும், இது ‘க.க.க.போ.’ என்பதும்தான் உண்மை..!

இதற்கு மேலும் யாருக்காச்சும் இந்த விஷயத்தில் ஏதாவது குழப்பம் வந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பல்ல..!

Our Score