‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..!

‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா..!

கே.பாலசந்தர் பவுண்டேஷன் சார்பில் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் 88-வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகை சுஹாசினி, நடிகர் நாசர், இயக்குநர் சரண், நடிகர் வரதராஜன், தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், வசந்த், வழக்கறிஞர் சுமதி, பட்டிமன்றப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா, நடிகை உமா பத்மநாபன், மற்றும் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் பாலச்சந்தர், மகள் புஷ்பா கந்தசாமி, மருமகன் கந்தசாமி, மருமகள் கீதா கைலாசம் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Our Score