full screen background image

கேரளாவிலும் 2 நடிகர்கள் சட்டசபைக்குள் நுழைகிறார்கள்..!

கேரளாவிலும் 2 நடிகர்கள் சட்டசபைக்குள் நுழைகிறார்கள்..!

கேரளா சட்டசபை தேர்தலில் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கொல்லம் மாவட்டம் பத்தனாபுரம் தொகுதியில் நடிகர் கே.பி.கணேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் சார்பில் போட்டியி்ட்ட நடிகர் கணேஷ்குமார், 74429 வாக்குகளைப் பெற்றார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மலையாள நகைச்சுவை நடிகர் ஜெகதீஷ் 49867 வாக்குகள் பெற்றிருந்தார்.

இதனால் 24,562 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் நடிகர் கணேஷ்குமார்.

இதே தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரபல வில்லன் நடிகரான பீமன் ரகு, 11700 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையே பிடித்திருக்கிறார்.

இதேபோல் கொல்லம் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பிரபல மலையாள நடிகர் முகேஷ், வெற்றி பெற்றுள்ளார்.

முகேஷ் 63103 வாக்குகளும், இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சூரஜ் ரவி 43492 வாக்குகளும் பெற்றனர். 17241 வாக்கு வித்தியாசத்தில் முகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

ஆக, தமிழ்நாட்டை போலவே கேரள சட்டசபையிலும் இரண்டு நடிகர்கள் நுழைகிறார்கள்.

Our Score