full screen background image

கூலிப்படைகள் உருவாகக் காரணம் என்ன..? அலசுகிறது ‘K-3’ திரைப்படம்..!

கூலிப்படைகள் உருவாகக் காரணம் என்ன..? அலசுகிறது ‘K-3’ திரைப்படம்..!

காமதேனு இண்டர்நேஷனல் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘k-3’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் விமல்ராஜா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் விஸ்வாந்த், சுதிர், பாவா லட்சுமணன், மீசை ராஜேந்திரநாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இசை   –    பிரத்வய் சிவசங்கர் ( இவர் A.R.ரகுமான் இசை பள்ளியின் மாணவர்)

பாடல்கள்    –  இயக்குனர் ரவிசங்கர்

எடிட்டிங்    –   கே.தணிகாசலம்

நடனம்    –   அஜய்சிவசங்கர்

கலை  –  கதிர் பத்மநாபன்

தயாரிப்பு  வடிவமைப்பு   –  எஸ்.அருணாச்சலம்

தயாரிப்பு    –   காமதேனு இண்டர்நேசனல்.

இணை தயாரிப்பு   –  என்.திருமுருகன், வி.பிரகாஷ்ராஜ்

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம்  –  எம்.எஸ்.அண்ணாதுரை

படம் பற்றி இயக்குனர் எம்.எஸ்.அண்ணாதுரை பேசும்போது, “இரவு நேரங்களில் போஸ்டர் ஒட்டும் கதிர், கஞ்சா, கருப்பு என்ற மூன்று இளைஞர்களின் வாழ்க்கைதான் இந்தப் படம். அதனால்தான் இந்த படத்திற்கு ‘k3’ என்று பெயர் வைத்துள்ளோம்.

அந்த மூன்று இளைஞர்கள்  கூலிப்படையாக எப்படி மாறுகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இன்று நாட்டில் கூலிப்படையில் வேலை செய்வது  பெரும்பாலும் பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான். அவர்கள் கூலிப்படையாக மாற காரணம் அவர்களது வாழ்க்கைச் சூழல்தான். அதைதான் இதில் படமாக்கியிருக்கிறோம். காதல் மற்றும் திரில்லர் கலந்த படமாக உருவாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கேரளா, சென்னை, சேலம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

இந்த படத்தை பார்த்த கன்னட தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் உரிமையை வாங்கிவிட்டார். அது எங்கள் படத்திற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். படம் இம்மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது..” என்றார் இயக்குனர்.

Our Score