full screen background image

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’ திரைப்படம்..!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ’36 வயதினிலே’ திரைப்படம்..!

சுமார் 8 வருட கால இடைவெளிக்கு பின்பு ஜோதிகா இப்போது நடித்திருக்கும் புதிய படத்திற்கு ’36 வயதினிலே’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘How Old Are You’ என்கிற படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.  இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2-D Entertainment என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். 

மலையாளத்தில் இந்தப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்கியிருக்கிறார். மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த கேரக்டரில் ஜோதிகா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ரகுமான் நடித்திருக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இதுவரையில் இந்தப் படத்திற்கு பெயர் சூட்டாமல் வைத்திருந்தவர்கள் நேற்று படத்தின் பெயரை அறிவித்திருக்கிறார்கள்.

’36 வயதினிலே’ என்பதுதான் படத்தின் பெயராம். ஜோதிகாவின் தற்போதைய வயதோடு ஒப்பிட்டு பார்த்து வைத்திருக்கிறார்கள் போலும்..!

’16 வயதினிலே’ படத்தை போல இதுவும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score