பிரசாந்த் நடித்த ‘ஜானி’ டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது..!

பிரசாந்த் நடித்த ‘ஜானி’ டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது..!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜானி’ திரைப்படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தை ‘ஸ்டார் மூவிஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளரும், பிரசாந்தின் தந்தையுமான நடிகர் தியாகராஜன் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்துடன், ‘இளைய திலகம்’ பிரபு, சஞ்சிதா ஷெட்டி, ஆனந்த்ராஜ், ஷாயாஜி ஷிண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ப.வெற்றி செல்வன், கதை – ஸ்ரீராம் ராகவன், ஒளிப்பதிவு – எம்.வி.பன்னீர்செல்வம், இசை – ஜெய்கணேஷ், கலை இயக்கம் – மிலன், படத் தொகுப்பு – சிவ சரவணன், தயாரிப்பு – தியாகராஜன், தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் மூவிஸ்.

DsH4UCUV4AA7DTB

தன்னுடைய 17-வது ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கால் பதித்த பிரசாந்த், தொடர்ந்து வெற்றிப் படிகளில் ஏறினார். மிகக் குறுகிய காலத்தில் தமிழ் இளைஞர்களிடையே புகழ் பெற்று ‘டாப் ஸ்டார்’ என்ற அடையாளத்துடன் மளமளவென்று பல படங்களில் நடித்தார்.

‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செம்பருத்தி’, ‘திருடா திருடா’, ‘ஜீன்ஸ்’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’ போன்ற படங்கள் பிரசாந்தை விநியோகஸ்தர்களின் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்க வைத்தது. பிரசாந்த்துக்கு இளைஞர்கள் மட்டுமல்லாது, பெண் ரசிகைகளும் அதிகமாக இருந்தனர். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் வெற்றிக்குக் காரணமே அந்தப் படத்திற்கு வந்த பெண் ரசிகைகள்தான் என்று இன்றைக்கும் தமிழ்த் திரையுலகில் சொல்வார்கள்.

johnny movie

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள பிரசாந்த், காலப்போக்கில் தடுமாறினார்.  2004-ம் ஆண்டுக்கு பிறகு பிரசாந்தின் மார்க்கெட் டல்லானது.

அதன் பிறகு வருடத்திற்கு ஒரு படமாக ‘ஷாக்’, ‘ஆயுதம்’, ‘லண்டன், ‘ஜாம்பவான்’, ‘தகப்பன்சாமி’, ‘அடைக்கலம்’, ‘பொன்னர் ஷங்கர்’, ‘மம்பட்டியான்’, ‘புலன் விசாரணை-2’, ‘சாகசம்’ என்று வரிசையாக இதுவரை வெளியான படங்களும் அவருக்குப் பெரிய வெற்றியையும், பெயரையும் பெற்றுத் பெறவில்லை.

தற்போது அவர் நடித்திருக்கும் இந்த ‘ஜானி’ திரைப்படம் ஹிந்தியில் நீல் நிதின் முகேஷ், தர்மேந்திரா நடிப்பில் வெளியான ‘ஜானி கட்டார்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

johnny movie

தமிழில் பிரசாந்துக்காக இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாம்.  ஹிந்தியில் ‘ஜானி கட்டார்’ பெரும் வெற்றி பெற்றுள்ளதால், இத்திரைப்படம் தமிழிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இந்த ‘ஜானி’ திரைப்படம் இம்மாதம் 14-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாத இறுதியில் இத்திரைப்படம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தேதியில் ‘2.0’ படம் வருவதாக அறிவிக்கப்பட்டவுடன் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

பிரசாந்த் நடிப்பில் மிக நீண்ட இடைவெளியில் ‘ஜானி’ வெளிவருவதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

Our Score