சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகி வரும் படம் “ஜாக்கி.”
இந்தப் படத்தில் யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், நளினி, ரவி பிரகாஷ், சேரன்ராஜ், கஞ்சா கருப்பு, வாசு விக்ரம், டான்ஸ் மாஸ்டர் தினா, ரிஷா, ரேகாஸ்ரீ, தளபதி தினேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரவி
இசை – ஸ்ரீகாந்த் தேவா
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
பாடல்கள் – அறிவுமதி, ரவிஷங்கர், அண்ணாமலை
நடனம் – தினா, பாப்பி, ராதிகா,
ஸ்டன்ட் – தளபதி தினேஷ்
கலை – பி.ராஜு
எழுதி இயக்குபவர் கோவை ரவிராஜன்
இப்படத்தின் பாடல் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
“என் உயிரான ஜீவன்
எனை நானே தேடும் நேரம்
உனை நானாய் பார்த்தேனே”
என்ற பாடல் காட்சி யுவன் – தர்ஷிதா ஆடிப் பாட படமாக்கப்பட்டது. இத்துடன் மேலும் மூன்று பாடல் காட்சிகள் பத்து நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகிறது ஜாக்கி.