full screen background image

வருகிறது ‘ஜித்தன்’ படத்தின் இரண்டாம் பாகம்..!

வருகிறது ‘ஜித்தன்’ படத்தின் இரண்டாம் பாகம்..!

வெற்றி பெற்ற திரைப்படங்களின் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் வெளியாவதும் சமீபத்திய வியாபார நுணுக்கம் என கூறலாம்.

முந்தைய படத்தில் நாயகனாக நடித்த ரமேஷ், ‘ஜித்தன்’ என்கிற அடைமொழியுடன் அழைக்கப்படுவதே அந்த கதாபாத்திரம், ரசிகர்களிடையே எந்த அளவுக்கு பதிவானது என்பதற்கு சான்று.

இப்போது மீண்டும் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க, ஜித்தன் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகிறது. மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே ‘ஜித்தன்2’.

ராகுல் பரமஹம்சா என்ற புதிய இயக்குனரின் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் தயாராகும் ‘ஜித்தன் 2’  படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான, இவர்களுக்கு தமிழில் இது முதல் படமாகும்.

மேலாண்மை கல்வியில் தங்கப் பதக்கம் வென்ற இயக்குனர் ராகுல் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல், சரியான முறையில் விளம்பரம் செய்து வெளியிடுவதுதான் இன்றைய காலகட்டத்தில் சவாலான சூழ்நிலை என்ற பட்சத்தில் தன்னுடைய கல்வி அறிவும், தன்னுடைய அனுபவமும் அதை திறம்பட செய்ய உதவும் என நம்புகிறார்.

Our Score