full screen background image

சித்தார்த் நடிக்கும் புதிய படம் ‘ஜில் ஜங் ஜக்’..!

சித்தார்த் நடிக்கும் புதிய படம் ‘ஜில் ஜங் ஜக்’..!

நடிகர் சித்தார்த் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜில் ஜங் ஜக்’ என்று மிக மிக வித்தியாசமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சித்தார்த்தே தயாரிக்கிறார் என்பதும் கூடுதல் ஸ்பெஷல்.

இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷல் இதில் ஹீரோயினே கிடையாதாம். படத்தின் கதை மூன்றுவிதமான ஆண்களைப் பற்றிய கதைதானாம். அறிமுக இயக்குநரான தீரஜ் வைடி இந்தப் படத்தை எழுதி, இயக்கவுள்ளார்.

நாஞ்’ஜில்’ சிவாஜி, ‘ஜங்’குலிங்கம், ‘ஜக’ன் ஆகிய மூன்று முக்கிய கேரக்டர்களின் பெயர்களில் இருந்துதான் ‘ஜில் ஜங், ஜக்’ என்று டைட்டிலை உருவியிருக்கிறார்களாம். படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் துவங்கியிருக்கிறது.

ஒளிப்பதிவு – ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை – விஷால் சந்திரசேகர், எடிட்டிங் – கர்ட்ஸ் ஷிண்டர், சண்டை பயிற்சி – சக்தி சரவணன், உடைகள் – அசோக் குமார், ஒப்பனை – சிவா, இணை கதாசிரியர் – மோகன் ராமகிருஷ்ணன், இணை தயாரிப்பு – மிலிந்த் ராவ், தயாரிப்பு – சித்தார்த், எழுத்து, இயக்கம் – தீரஜ் வைடி.

Our Score