‘8 தோட்டாக்கள்’ வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸின் தயாரிப்பாளர் M.வெள்ளபாண்டியனின் தயாரிப்பில் இரண்டாவது படமாக ‘ஜீவி’ திரைப்படம் உருவாகின்றது.
இதில் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி, மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், மைம் கோபி, ரோகிணி, ரமா ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரவீன் குமார், இசை – சுந்தரமூர்த்தி K.S., படத் தொகுப்பு – பிரவீன் K.L., கலை – வைர பாலன், முதன்மை தயாரிப்பு – பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – ஐ.பி.கார்த்திகேயன், பாபு தமிழ் கதை, வசனம் எழுத, புதுமுக இயக்குநர் V.J.கோபிநாத் இயக்குகிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் கூறும்போது, “இந்தப் படத்தின் கதை விஞ்ஞானத்திற்கும், மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக இத்திரைப்படம் உருவாகி வருகிறது…” என்றார்.