full screen background image

‘ஜிகினா’ படத்தின் இசையை ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் வெளியிட்டனர்

‘ஜிகினா’  படத்தின் இசையை ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் வெளியிட்டனர்

சூரியனில் தோய்ந்த மெல்லிய தூரிகையும்  தங்க சருகாய் மின்னும். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ள   ‘ஜிகினா’ திரைப்படம்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ள இந்த ‘ஜிகினா’ திரைப்படத்தின்   இசை சூரியன் FM அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சி பற்றியும் படம் பற்றியும் பேசிய தயாரிப்பாளர் லிங்குசாமி, “திரையுலகின் பெரிய நட்சத்திரங்கள் முன்னிலையில்தான் ஒரு புதிய படத்தின் இசை வெளியிடுவது வழக்கம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை’  படத்தில் நம் அனைவரது  நெஞ்சங்களை கொள்ளைக் கொண்ட இரு சிறுவர்கள்தான் எங்களது சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள்.

P1150398

மேலும்,  இன்றைய நிலையில் சிறிய படங்களே தமிழில் வெற்றி பெறுகிறது என்று கூறப்படும்  நிதர்சனத்தின் நிஜ உருவாய் நிற்பவர்களும் இவர்களே.  நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்கள்தான் மின்னும் பொன் போன்றது.. எங்களது நிறுவனத்திலிருந்து வெளிவந்து  மக்களிடையே பெரிதாய் பேசப்பட்ட ‘வழக்கு எண் 18/9’, ‘கோலிசோடா’, ‘மஞ்சப்பை’, ‘சதுரங்க வேட்டை’ வரிசையில் ஜிகினாவும் பெயருக்கு ஏற்றாற்போல் மின்னும்..” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

Our Score