‘ஜிகர்தண்டா’ திருட்டு டிவிடி – போலீஸ் கமிஷனரிடம் புகார்..!

‘ஜிகர்தண்டா’ திருட்டு டிவிடி – போலீஸ் கமிஷனரிடம் புகார்..!

இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்திற்கும் திருட்டு டிவிடி வந்துவிட்டதாம்..

இதை எதிர்த்து 1001-வது முறையாக போலீஸில் புகார் கொடுக்க, நேற்று காலை திரையுலக பிரபலங்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு படையெடுத்துள்ளனர்.

ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனோடு தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, சித்ரா லட்சுமணன், பிரமிட் நடராஜன், ஜாகுவார் தங்கம், கே.எஸ்.சீனிவாசன், டி.சிவா, கே.ராஜன், இயக்குநர்கள் வெற்றிமாறன், வீ.சேகர், வேல்ராஜ், நடிகர் பார்த்திபன், பி.ஆர்.ஓ.க்கள் சங்கத் தலைவர் விஜயமுரளி ஆகியோர் படை திரண்டு சென்றுள்ளார்கள்.

புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வரவேற்பு எப்படியிருக்கும் என்பது தெரியாமல் நேற்று முதல் முறையாக அங்கே போய் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர் இந்த திரையுலக பிரபலங்கள்..

அரிதிலும், அரிதாகத்தான் சந்திக்க முடியும் என்கிற நிலையில் இருக்கும் சென்னை போலீஸ் கமிஷனரை இவர்கள் நினைத்த மாத்திரத்தில் பார்க்க முடியுமா… என்ன..? கடைசியாக 5 பேர் மட்டுமே பார்க்க முடியும் என்று சொல்லி 5 பேரை மட்டுமே அழைத்துச் சென்று பார்க்க வைத்தார்களாம் காவலர்கள்.

வேறு வழியில்லாமல் தாணு உள்ளிட்டவர்களையே வெளியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்ற தயாரிப்பாளர் கதிரேசன் தனது படத்தின் திருட்டு டிவிடிகளை காட்டி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனரிடம் கோரிக்கை வைததாராம்..

கமிஷனர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை..! நமக்கே தெரிந்ததுதான்..!

Our Score