full screen background image

கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் ‘ஜெயிக்கப் போவது யாரு’ திரைப்படம்    

கின்னஸ் சாதனை படைக்கவிருக்கும் ‘ஜெயிக்கப் போவது யாரு’ திரைப்படம்    

டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரித்திருக்கும் படம் ‘ஜெயிக்கப் போவது யாரு’

இந்த படத்தில் சக்தி ஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாயகனாக நடிக்கிறார் சக்தி ஸ்காட். இசை   –  சக்திஸ்காட் மற்றும் ஆண்டன் ஜெப்ரின்.

படம் பற்றி இயக்குநர் சக்தி ஸ்காட் பேசும்போது, “இது கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.  

இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான்தான். ‘ஜோடியாக்’ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012-ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார். அதற்கு பிறகு 29 துறைகளில் பணியாற்றி நான் இந்தப் படத்தை முடித்துள்ளேன். இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும்  இடம் பெறும்…” என்று நம்பிக்கையுடம் கூறினார் இயக்குநர் சக்திஸ்காட்.

இந்தப் படத்தின் இசையை சமீபத்தில் இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் வெளியிட்டார்.  படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

 

Our Score