full screen background image

வெள்ளை பன்றி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ஜெட்லீ’ திரைப்படம்

வெள்ளை பன்றி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ஜெட்லீ’ திரைப்படம்

ஆடு முக்கிய வேடத்தில் நடித்த ‘ஆட்டுக்கார அலமேலு’, மாடு நடித்த ‘கோமாதா என் குல மாதா’ யானை நடித்த  ‘நல்ல நேரம்’, ‘அன்னை ஒரு ஆலயம்’, ‘கும்கி’, பாம்பு நடித்த ‘நீயா’, ‘வெள்ளிக்கிழமை விரதம்’, ‘நாகம்’, ஈ முக்கியமாக நடித்த ‘நான் ஈ’, கழுதை பங்கேற்ற ‘பஞ்ச கல்யாணி’, நாய் நடித்த ‘தாய் வீடு’ ‘நாய்கள் ஜாக்கிரதை’, குதிரை முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து தேசிய விருது பெற்ற ‘அழகர்சாமியின் குதிரை’ போன்ற படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த வரிசையில் இதுவரையில் தமிழ்ச் சினிமாவில் வந்திராதவண்ணம் குட்டி வெள்ளை பன்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பில் ‘ஜெட்லீ’ என்ற படம் தயாராகியுள்ளது.

இந்தப் படத்தில் நகைச்சுவை நாயகர்களாக கண்ணன் பொன்னையா, ஜெகன் சாய் இருவரும் நடிக்கிறார்கள். இயக்குநர் கெளதம் மேன்னின் உதவியாளராகப் பணியாற்றியவர் கண்ணன் பொன்னையா. கதாநாயகிகளாக ‘என்னை அறிந்தால்’, ‘உத்தமவில்லன்’ படங்களில் நடித்திருக்கும் பார்வதி நாயர், ‘சைத்தான்’ படத்தில் நடித்திருக்கும் அருந்ததி நாயர்  இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் பவன், மிப்பு, ஸ்டன்ட் நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர்.          

ஒளிப்பதிவு    –  துலிப் குமார், இசை    –   சத்யா, கலை   –  குருராஜ், வசனம்   –  நாராயணன், ஸ்டண்ட்   –  நைப் நரேன், எழுத்து, இயக்கம் – ஜெகன்சாய், தயாரிப்பு   –  ஸ்ரீசிவாஜி சினிமாஸ் – ஒண்டர்லேண்.ட் மோஷன் பிக்சர்ஸ்.

“தற்போது மக்களிடம் அறியாமை தலை விரித்தாடுகிறது. அபசகுனம், சுபசகுனம் என்று சகுனங்களின் மேல் அதிக நம்பிக்கை வைத்துதான் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை காசாக்க நினைக்கும் இருவரின் நகைச்சுவை கலாட்டாதான்  இந்த ‘ஜெட்லீ’ திரைப்படம்.

ஹாலிவுட் கலைஞர்கள் இந்தப்  படத்தில் பணிபுரிகிறார்கள். ‘நார்னியா’, ‘லயன்’ போன்ற படங்களின் மாடல் அனிமேட்டர் இதில் பணிபுரிகிறார். மிக உயரிய தொழில் நுட்பத்துடன் ஜெட்லீ உருவாகிறது. காமெடிதான் படத்தின் உயிர் நாடி. சென்னை, திருநெல்வேலி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது..” என்றார் இயக்குநர் ஜெகன் சாய்.

Our Score