ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் பேய் படம் ‘ஜெஸி’..!

ஹாலிவுட் பாணியில் உருவாகியிருக்கும் பேய் படம் ‘ஜெஸி’..!

சாய்ராஜ் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பி.பீ.எஸ். ஈசா குகா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜெஸி’.

கின்னஸ் சாதனைப் படங்களான ‘அகடம்’ மற்றும் ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் இசாக்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு இது.

படத்தில் நாயகனாக அறிமுக நாயகன் ஜெமினி நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ரீபிரியங்கா, லட்சுமி கிரண் நடித்திருக்கின்றனர். மற்றும் பலர் திரையுலக பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம் -  இசாக், ஒளிப்பதிவு -  நெளஷாத், இசை -  சஜித் ஆண்டர்சன் ராஜ், படத் தொகுப்பு -  எஸ்.தேவராஜ், கலை -  பூங்கா கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு -செல்வரகு, தயாரிப்பாளர் - பி.பீ.எஸ். ஈசா குகா.

இத்திரைப்படம் ஹாலிவுட் பாணியில் தயாராகியிருக்கிறது. இதில் நகைச்சுவை சிறிதும் கலக்கவில்லை.

நம் நாட்டில் நடக்கும் தடுக்க முடியாத கிரைம்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக திரைக்கதை அமைக்கப்பட்டு ஒரு வித்தியாசமான கதை களத்தோடு இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

பேய்கள் மீது நம்பிக்கையில்லாத ஒரு திரைப்பட  இயக்குநர், பேய் படம் எடுக்க திட்டமிடுகிறார். இதற்காக ஒரு தனிமையான பங்களாவில் குடியேறுகிறார். அந்த பங்களாவில் ஏதோ ஒரு அமானுஷ்யம் உள்ளதால் இயக்குநர் எழுத ஆரம்பிக்கும்போதெல்லாம் அவரை எழுத விடாமல் தடுக்கிறது பேய். அவர் கதையை எழுதி முடித்தாரா.. இல்லையா... என்பதுதான் மீதி கதை.

ரசிகர்களை புதுவிதமாக திகிலூட்ட, சில சிறப்பு அம்சங்களை நுணுக்கமாக இயக்குநர் கையாண்டுள்ளார். ரசிகர்களுக்கு பயத்தின் தன்மை நீங்காதவண்ணம் சில காட்சிகள் 'லோ லைட் கேப்ச்சர் மெத்தெட்’-ல் படமாக்கப்பட்டுள்ளது.

படம் மிக விரைவில் திரைக்கு வருகின்றது. இத்திரைப்படத்தில் பாடல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.