‘ஜெயிக்கிற குதிர’ படத்திற்கு ‘A’ சர்டிபிகேட்

‘ஜெயிக்கிற குதிர’ படத்திற்கு ‘A’ சர்டிபிகேட்

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கிற குதிர.’

இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவை சரளா, ரவி மரியா, சிங்கம் புலி, சித்ரா லட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ் கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, தீபா ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஆஞ்சி, இசை - கே.ஆர்.கவின் சிவா, படத் தொகுப்பு – ரஞ்சித்குமார், கலை – மணி கார்த்திக், சண்டை பயிற்சி - தளபதி தினேஷ், நடனம் – கூல் ஜெயந்த், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.எம்.சேகர், தயாரிப்பு நிர்வாகம் – லியாகத், தயாரிப்பு – டி.ஆர்.திரேஜா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷக்தி என்.சிதம்பரம்.

படம் பற்றி இயக்குனர் ஷக்தி N.சிதம்பரம் பேசும்போது, "இந்த படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட்டு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது.

இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த  காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அணைத்து அம்சங்களும் இருந்தால்தான் அவர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெறும். அப்படி அனைத்து அம்சங்களும் உள்ள படம்தான் இந்த ‘ஜெயிக்கிற குதிர’.

படம் தொடக்கம் முதல் முடிவுவரை முழுக்க, முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கும்.  படம் விரைவில் வெளியாக உள்ளது.." என்றார் இயக்குநர் ஷக்தி N.சிதம்பரம்.