‘ரோமியோ ஜூலியட்’டுக்காக ஜெயம்ரவி-ஹன்ஸிகா மும்பையில் டூயட்..!

‘ரோமியோ ஜூலியட்’டுக்காக ஜெயம்ரவி-ஹன்ஸிகா மும்பையில் டூயட்..!

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பாடல் காட்சிக்காக இப்போது ஜெயம்ரவியும், ஹன்ஸிகா மோத்வானியும் மும்பையில் முகாமிட்டுள்ளார்கள். இரண்டாவது ஹீரோயினான பூனம் பஜ்வாவும் உடன் இருக்கிறார். அவரும் இந்தப் பாடல் காட்சியில் நடிக்கிறார்.

உள்ளரங்கத்திலும், வெளியிலுமாக ஷுட் செய்யப்படும் இந்தப் பாடல் காட்சிக்காக மிகப் பெரிய செலவில் செட் அமைத்திருக்கிறார்கள். கூடவே அங்கேயே ஒரு பரபரப்பான சண்டை காட்சியும் படமாக்கப்படவுள்ளது.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் இந்தப் படத்தை மிக பிரமாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.

இசை – டி.இமான்

பாடல்கள் – தாமரை, மதன் கார்க்கி

கலை – மிலன்

நடனம் – ஷெரீப்

ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்

எடிட்டிங் – ஆண்டனி

வசனம் – சந்துரு

தயாரிப்பு நிர்வாகம் – ரமணா, A.K. கார்த்திக்

தயாரிப்பு மேற்பார்வை – K.K.ரவி

தயாரிப்பு வடிவமைப்பு – A.K.சேகர்

தயாரிப்பு – எஸ். நந்தகோபால்

கதை, திரைக்கதை, இயக்கம் – லஷ்மண்

Our Score