இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில், ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் வில்லனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த ‘ஜவான்’ படத்தில் ஷாரூக்கானுடன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியாமணி, குல்ஷன் குரோவர், சன்யா மல்ஹோத்ரா, சஞ்சய் தத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
SRK இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத் தொகுப்பு செய்திருக்கிறார்.
ஷாருக் மற்றும் நயன்தாரா படத்தின் போஸ்டர்களைத் தொடர்ந்து படக் குழுவினர் விஜய் சேதுபதியின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.
‘ஜவான்’ படத்தின் டீசர் இந்த மாத தொடக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புதிய போஸ்டர் படத்தில் ‘மக்கள் செல்வனின்’ முழுமையான தோற்றத்தைக் காட்டுகிறது. மேலும் அதில் அவரது கதாபாத்திரம் பற்றி ‘மரணத்தின் வியாபாரி sic).’ என்ற டேக் லைனும் உள்ளது.
இந்த ‘ஜவான்’ திரைப்படம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பர் 7-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.










