full screen background image

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான்-நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ படம்

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான்-நயன்தாரா நடிக்கும் ‘ஜவான்’ படம்

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் மெகா ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் பிரமாண்டமான ஆக்‌சன் எண்டர்டெயினர் திரைப்படம் ஜவான்’.  இந்த படத்தை ஷாருக்கானின் மனைவியான கௌரி கான் தயாரிக்கிறார்.

இந்தியத் திரைத்துறை இதுவரையிலும் கண்டிராத வகையில், உயர் தர ஆக்சன் காட்சிகளுடன், இந்திய சினிமாவின் பெரும் கலைஞர்கள் இணைந்து பணியாற்ற,  பிரம்மாண்டமான  பொருட்செலவில் அற்புதமான படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. 

ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ என தென்னிந்தியாவில் வெற்றிகரமான பிளாக் பஸ்டர் படங்களை தந்த இயக்குநரான அட்லீ, தற்போது இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ‘ஜவான்’ என்ற பாலிவுட் படத்தின் மூலமாக  மீண்டும் தனது மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தவுள்ளார்.

ரசிகர்களின்  அனைத்து யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ஷாருக்கான் ஒரு முரட்டுத்தனமான பின்னணியில், காயம் மற்றும் கட்டுகளால் மூடப்பட்டிருக்கும் டீசர் வீடியோ இன்று வெளியிடப்பட்டது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், திரைப்படத்தின் தன்மையையும், படத்தின் தொனியையும் ரசிகர்களுக்கு சொல்வதாக அமைந்துள்ளது.

இந்தப் படம் குறித்து ஷாருக்கான் கூறுகையில், “இந்த ஜவான்’ படம்  மொழி, நிலப்பரப்பு தாண்டி அனைவரும் ரசிக்கக்கூடிய ஒரு உலகளாவிய கதை. இந்த தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குவதற்கான பெருமை அட்லீயைத்தான் சேரும். ஆக்‌சன் படங்களை விரும்பும் எனக்கு இந்த படம் ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது..!  எங்கள் திரைப்படத்தின்  ஒரு முன்னோட்டமாக இந்த  டீசர் இருக்கும். இந்த டீசர் திரைப்படம் பற்றிய ஒரு பார்வையை  ரசிகர்களுக்கு அளிக்கும்…” என்றார்.

இயக்குநர் அட்லீ பேசுகையில், “இந்த ‘ஜவான்’ உணர்வுப்பூர்வமான டிராமா, ஆக்‌சன் என எல்லாம் கலந்த திரைப்படமாக இருக்கும். பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்க விரும்புகிறேன், அவர்கள் அனைவரும் ஒன்றாக ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படத்தையும், முன் எப்போதும் இல்லாத வகையில் ஷாருக்கானை சிறப்பாகவும் காட்ட முயற்சித்துள்ளேன்…” என்றார்.

இந்த ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பையடுத்து,  அடுத்த ஆண்டில் ஷாருக்கான் மேலும் ‘டங்கி’, ‘பதான்’ ஆகிய படங்களின் மூலம் பார்வையாளர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் விருந்தளிக்க உள்ளார்.

இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதியன்று வெளியாகிறது.

Our Score