பாலிவுட் பாதுஷாவான ஷாருக்கானின் நடிப்பில் வரவிருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘ஜவான்’ படத்தின் ஒவ்வொரு செய்தியும் இன்றைய நிலையில் அனைத்து வகையான மீடியாக்களிலும் தலைப்பு செய்தியில் இடம் பிடித்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் இன்று தனது சமூக வலைத்தளத்தில், இந்த ஜவான் படத்தின் புத்தம் புதிய போஸ்டரை வெளியிட்டு படத்திற்கான கவுண்ட் டவுனை துவக்கி வைத்துள்ளார். இந்தப் போஸ்டர் மிகப் பெரிய வெளியீட்டிற்கான இறுதி கவுண்ட் டவுனாக அமைந்துள்ளது.
இந்த ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரிகான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.









