கிளாசிக் சினி சர்க்யூட் என்ற பட நிறுவனம் சார்பாக எம்.ஜெயக்குமார் எழுதி இயக்கி தயாரிக்கும் படம் “ஜமாய்.” சுமார் 28 வருடங்களுக்கு முன்பு இன்றைய தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். தயாரித்து நடிகர் ஆனந்த்பாபு ஹீரோவாக அறிமுகமான “பாடும் வானம்பாடி” படத்தை இயக்கியவர்தான் இந்த எம்.ஜெயக்குமார். இந்தப் படம் 300 நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நவீன், உதய் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக வைஜெயந்தி, நிவிஷா நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்த்பாபு, ராதாரவி, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், ராஜப்பா, மதன்பாப், சீதா, சங்கீதா பாலன், மாஸ்டர் மகேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – M.D.சுகுமார்
இசை – தினா
பாடல்கள் – கவிஞர் வாலி, நா.முத்துக்குமார்
கலை – ஆர்.மோகன்
நடனம் – ஜான்பாபு, அசோக்ராஜா
தயாரிப்பு மேற்பார்வை – என்.ஜனார்த்தனம்
வசனம் – சிவா
கதை, திரைக்கதை, எழுதி தயாரித்து இயக்குகிறார் எம்.ஜெயக்குமார்
படம் பற்றி இயக்குனர் சொல்லும்போது, “இசை என்பது எவ்வளவு மென்மையான விஷயம்.இசைக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் ஜமாய் படத்தில் ஒரு இசைக்கலைஞன் மீது காதல் கொள்ளும் ஒரு இளம் பெண் தன் காதலில் ஜெயித்தாளா? இல்லையா என்பதை சொல்லி இருக்கிறோம்..” என்றார் எம்.ஜெயக்குமார்.