வித்தியாசமான வேடங்களில் நடித்து இதுவரை தன்னை ஒரு இயக்குநரின் நடிகனாக வெளிக் காட்டி வரும் ஜெய் அடுத்து நடிக்க இருக்கும் படம் ஒரு பேய் கதை ஆகும்.
அடுத்த வீட்டு பையன் என்ற இமேஜ் உடைய ஜெய் தனக்கு கிடைக்கும் எல்லா வேடங்களிலும் சோபிக்கக் கூடியவர் என்பதில் திரை உலகினர் இடையே ஒருமித்தக் கருத்து உண்டு.
அப்பாவி இளைஞன், காதல் நாயகன், அதிரடி நாயகன் என்றுப் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் ஜெய் அடுத்ததாக நடிக்கும் படம் ஒரு பேய் படமாகும்.
இந்தப் படத்தை 70 எம்.எம். நிறுவனத்தை சேர்ந்த டி.என்.அருண் பாலாஜி, கந்தவேல் மற்றும் பார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் நிறுவனம் சார்பாக திலிப் சுப்புராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குநரான சினிஷ் இயக்கும் இந்தப் படத்தில் ஜெய் மூன்று வெவ்வேறு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேர்வு செய்து வருகிறார்கள்.
சரவணன் ஒளிப்பதிவை கவனிக்க, ரூபன் படத் தொகுப்பு செய்ய, திலீப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், ஷெரிப் நடனம் அமைக்க உருவாகும் இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் தேர்வும் நடைபெற்று வருகிறதாம்.
1989-ம் ஆண்டின் பின்னணியில் தயாரிக்கப்படும் இந்தப் படம், முழுக்க முழுக்க கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ளது.