full screen background image

‘ஜெய் பீம்’ மணிகண்டன் நடிப்பில் குறட்டை நோயை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம்

‘ஜெய் பீம்’ மணிகண்டன் நடிப்பில் குறட்டை நோயை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம்

‘விக்ரம் வேதா’, ‘காலா’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஜெய் பீம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த மணிகண்டன் முதல்முறையாக ஒரு படத்தில் தனி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்.ஆர்.பி.என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் மணிகண்டன் உடன் முக்கிய கதாபாத்திரங்களில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ஜெயந்த் சேதுமாதவன், இசை – ஷான் ரோல்டன், படத் தொகுப்பு – பரத் விக்ரமன், கலை இயக்கம் – ஸ்ரீகாந்த், கிரியேட்டிவ் ப்ரொடியூசர் – எஸ்.பி.சக்திவேல், எழுத்து, இயக்கம் – விநாயக் சந்திரசேகரன்.

இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ‘குறட்டை’ பிரச்சனையை மையமாக வைத்து நகைச்சுவையுடன் இணைந்த ஜனரஞ்சகமான பொழுது போக்கு திரைப்படமாக இதை உருவாக்கி இருக்கின்றனர்.

சென்னையை சுற்றி ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கின்றனர்.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Our Score