ராகுல் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் K.திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் படம் ‘BREAKING NEWS’.
தமிழ் சினிமாவில் தனி கதாநாயகன், இன்னொரு கதாநாயகனுடன் சேர்ந்து நடிப்பது, பல நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடிப்பது எனப் பல படங்களில் பார்த்து ரசித்த நடிகர் ஜெய், இந்தப் படத்தில் தனி நாயகனாக அதிலும் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
நாயகியாக தெலுங்கின் பானுஸ்ரீ நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், பழ.கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜானிலால், செவிலோ ராஜா, விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர் – பிரபாகர், படத் தொகுப்பு – அந்தோணி, கலை இயக்கம் – N.M.மகேஷ், சண்டைப் பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், நடனப் பயிற்சி இயக்கம் – ராதிகா, பாடல்கள், இசை – விஷால் பீட்டர், பின்னணி இசை – L.V.முத்து கணேஷ். ஒலி வடிவமைப்பு – ரமேஷ், சவுண்ட் FX – ரேண்டி, எழுத்து & இயக்கம் – ஆண்ட்ரூ பாண்டியன்.
ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாகவும் அற்புதமாகவும் படமாக்கி உள்ளனர். படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன.
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.









