full screen background image

தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் ‘ஜாங்கோ’ இன்று பூஜையுடன் துவங்கியது..!

தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் ‘ஜாங்கோ’ இன்று பூஜையுடன் துவங்கியது..!

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர்  சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படமான ‘ஜாங்கோ’ இன்று பூஜையுடன் துவங்கியது.

தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குநர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்  சீ.வி.குமார்  தனது திருக்குமரன்  எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் சார்பாக  ‘ஜாங்கோ’  எனும்  புதிய  படத்தைத் தயாரிக்கின்றார்.

சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், R.J.ரமேஷ்,  ஹரிஷ் பெராடி,  துளசி,  சந்தானபாரதி,  சிவாஜி,  கஜராஜ்  உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகவும், ‘முண்டாசுப்பட்டி’ படத்தில்  இணை இயக்குநராகவும் பணியாற்றிய  மனோ  கார்த்திக்கேயன்  இப்படத்தின்  மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தயாரிப்பு – சீ.வி.குமார், தயாரிப்பு நிறுவனம் – திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், இயக்கம் – மனோ கார்த்திக்கேயன், ஒளிப்பதிவு – கார்த்திக் K.தில்லை, இசை -நிவாஸ் பிரசன்னா, படத் தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால், கலை -கோபி ஆனந்த், உடை வடிவமைப்பு – மீனாக்ஷி ஷ்ரிதரன், சண்டை பயிற்சி – ஹரி திணேஷ், மக்கள் தொடர்பு – நிகில்.

இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் இனிதே நடைபெற்றது. பாரதிய  ஜனதா கட்சியின்  தமிழக இளைஞர்  அணி  தலைவரும்,  மஹாராஷ்ட்ரா  நவ்நிர்மான்  சேனாவின் தலைவருமான  ராஜ் தாக்கரேவின்  நெருங்கிய நண்பரான சதிஷ்குமார் போன்ஸ்லே படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

Our Score