full screen background image

சென்சாரில் ஒரு கட், ஒரு மியூட்கூட வாங்காமல் சான்றிதழ் பெற்றிருக்கும் பா.ரஞ்சித்தின் திரைப்படம்!

சென்சாரில் ஒரு கட், ஒரு மியூட்கூட வாங்காமல் சான்றிதழ் பெற்றிருக்கும் பா.ரஞ்சித்தின் திரைப்படம்!

பா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் J பேபி’ திரைப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ், விஸ்டாஸ் மீடியாஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் மூவரும் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

மேலும் கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்‌ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – டோனி பிரிட்டோ, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், படத்தொகுப்பு – சண்முகம் வேலுச்சாமி, கலை இயக்கம் – ராமு தங்கராஜ், பாடல்கள் – கபிலன் உமாதேவி, விவேக், பத்திரிக்கை தொடர்பு – குணா.

பா.இரஞ்சித் தயாரித்த படங்களில் இந்தப் படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக, குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள்.

இந்தப் படத்திற்கு சென்சார் எந்தவித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

இந்தப் படம் வரும் மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 

 

Our Score