full screen background image

கோவாவில் உருவாகியிருக்கும்  ‘இவளுக இம்சை தாங்க முடியல’

கோவாவில் உருவாகியிருக்கும்  ‘இவளுக இம்சை தாங்க முடியல’

இப்படத்தை ரூல் பிரேக்கர்ஸ்  மற்றும்  தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் சக்திவேல், ஜெகன் நாராயணன் ஆகியோர் இருவரும்  இணைந்து தயாரித்துள்ளனர். இவர்களில் சக்திவேல் ‘கந்தகோட்டை’, ‘ஈகோ’ ஆகிய படங்களை இயக்கியவர்.  அவரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த வி.என். ராஜசுப்ரமணியன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 

இந்தப் படத்தில் உதய் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் ‘நான் சிவனாகிறேன்’ படத்தில் நாயகனாக நடித்தவர். பாலாவின் இயக்கத்தில் ‘பரதேசி’ படத்தில் அதர்வாவுடன் நடித்தவர். நாயகியாக சஹானா நடித்துள்ளார்.  விஜய் டிவியின்  ‘கனா காணும் காலங்கள்’  புகழ் சிவகாந்த் முழு  நீள காமெடியனாக வந்து கலகலப்பூட்டியிருக்கிறார்.

ivaluga imsai-stills-2

ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலேசியப் பாப் இசைக் கலைஞரான கேஷ் வில்லன்ஸ்  இசையமைத்துள்ளார். ‘மிருதன் ‘படத்திற்கு படத் தொகுப்பு செய்த வெங்கட்ரணன் இந்தப் படத்திற்கு படத் தொகுப்பு பணியைச் செய்துள்ளார். நடனம் –‘காதல்’ கந்தாஸ். பாடல்கள் – விவேகா மற்றும் மணி வில்லன்ஸ். எழுத்து, இயக்கம் – வி.என்.ராஜசுப்ரமணியன்.

இது ஒரு முழு நீள காமெடி கலந்த ட்ராவலிங் படம். சமூக ஊடகங்கள்  மூலம் பழகி, காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா  புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன என்பதைப் பரபரப்பும், நகைச்சுவையும் கலந்து சொல்கிற கதை இது.

ivaluga imsai-stills-1

இந்தப் படம் முழுக்க முழுக்க கோவாவில் படமாகியுள்ளது. கோவா நகரம் அதன்  தெருக்கள், சாலைகள் என 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. மற்ற எந்தப்  படமும் காட்டாத கோவாவின் பல பகுதிகளில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.

இப்படம் முழுக்க, முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.  இளைஞர்களின் ஆதிக்கம் கொண்ட இப்படத்தில் வயதான பாத்திரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.  படத்தில் மூன்று  பாடல்கள் உள்ளன. இளைஞர்களை ஈர்க்கும் வண்ணம் பாடல் காட்சிகளை உருவாக்கியுள்ளார்கள்.

தற்போது இறுதிக்கட்ட மெருகேற்றும் பணியில் இருக்கும் இந்த  ‘இவளுக  இம்சை தாங்க முடியல ‘ திரைப்படம்,  ஜூலை மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

ரம்ஜான் தினமான நேற்று, இப்படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Our Score