full screen background image

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தினை எதிர்த்து இசைப் பிரியாவின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்தினை எதிர்த்து இசைப் பிரியாவின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இசைப் பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’  திரைப்படத்தினை எதிர்த்து இசைப் பிரியாவின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

Isaipriya-1

இந்த வழக்கின் அடிப்படையில் எதிர்வரும் பிப்ரவரி 4-ம் தேதி ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநரான கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “’போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்திற்கு மத்திய மாநில தணிக்கைக் குழுவினர் தடை விதித்ததற்கு எதிராக இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கிலும் இசைப் பிரியா குடும்பத்தினர் தம்மையும் ஒரு தரப்பாக இணைத்து இத்திரைப்படத்திற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேலும் ஒரு வழக்கினை இசைப் பிரியா குடும்பத்தினர் தொடுத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்திற்கு நிரந்தரத் தடை ஏற்படுத்தும் முனைப்புடன் செயற்படுவது வலுவான ஐயப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கள இராணுவத்தின் கொலை வெறியாட்டத்தை வெளிப்படுத்தும்விதமாக ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வெளிவருவதை தடுப்பவர்கள் தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைப்பதை விரும்பாதவர்கள் அல்லது தடுப்பவர்களாகவே இருக்கமுடியும். அந்த வகையில் இவ்வாறானவர்களுடைய பின்னணியில் இசைப்பிரியா குடும்பத்தினர் செயற்படுகின்றார்களோ என்ற ஐயப்பாடு ஏற்படுகின்றது..” என்று சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயன்றால், அவரது குடும்பத்தினரின் சம்மதம் அவசியம் தேவை. அதில்லையென்றால் அவர்கள் ஆட்சேபிக்கத்தான் செய்வார்கள். இயக்குநர் கணேசன் தேவையற்ற வேலைகளைச் செய்வதைவிட்டுவிட்டு இசைப் பிரியாவின் குடும்பத்தினரிடம் கலந்து பேசி முறைப்படி அனுமதியைப் பெற்றால் அவருக்கும் நல்லது. அவருடைய படத்திற்கும் நல்லது..!

Our Score