“ரஜினிகாந்த் சிறந்த நடிகரா” என்று இயக்குநர் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று சென்னையில் ‘செங்களம்’ வெப் சீரீஸ் தொடரின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான். ஆனால் சிவாஜிக்கே சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கலை. மிகவும் தாமதமாக தேவர் மகன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜிக்கு சிறப்பு விருதுதான் வழங்கப்பட்டது. இந்த விருதுகூட தேர்வுக் கமிட்டியில் இருந்த நம் தமிழ் இயக்குநர்களால் வற்புறுத்தி வாங்கப்பட்டது என்று சிவாஜியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்
ஆனால் 2007-ம் ஆண்டு ‘சிவாஜி’ படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான மாநில அரசு விருது கொடுத்தாங்க. மனசாட்சியை தொட்டு சொல்லுங்க ரஜினி சிறந்த நடிகரா..? அவர் சிறந்த என்டர்டெயினர். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்த ‘சிவாஜி’ படத்தில் ரஜினி விருது வாங்குற அளவுக்கா நடிச்சிருந்தார்..? இதனால், இப்போதெல்லாம் விருதுகள் எல்லாமே ஒரு லாபியில்தான் நடக்கிறது என்பது என் கருத்து” என்று கூறினார்.