விஜய்யின் 65-வது படத்தின் தலைப்பு இதுவா…?

விஜய்யின் 65-வது படத்தின் தலைப்பு இதுவா…?

நடிகர் விஜய் நடித்து வரும் 65-வது திரைப்படத்தின் பெயர் டார்கெட்’ என்று சொல்லி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

விஜய்யின் 65-வது படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா 2-வது அலை குறைந்த பின்னர் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இந்த நிலையில் விஜய்யின் 65-வது படத்துக்கு டார்கெட்’ என்ற தலைப்பினை வைத்திருப்பதாகச் சொல்லி நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் விஜய்யின் ரசிகர்கள் பரப்புரை செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்தத் தலைப்பை இதுவரையிலும் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸூம், இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் உறுதிப்படுத்தவில்லை.

பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் தலைப்பு மிகவும் முக்கியமான நாட்களில்தான் வெளியிடப்படும். அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளான வரும் ஜூன் 22-ம் தேதியன்று அந்தப் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Our Score