full screen background image

“இருமுகன்’ படத்தின் வசூல் விரைவில் 50 கோடியை எட்டும்…” – விநியோகஸ்தர் மகேஷ் நம்பிக்கை

“இருமுகன்’ படத்தின் வசூல் விரைவில் 50 கோடியை எட்டும்…” – விநியோகஸ்தர் மகேஷ் நம்பிக்கை

சியான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ வெற்றியடைந்திருப்பதை அந்தப் படத்தின் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும், படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்களும் சொல்கின்றனர்.

இந்தப் படத்தின் இதுநாள்வரையிலான வசூல் நிலவரத்தை நேற்றைக்கு நடைபெற்ற ‘இருமுகன்’ படத்தின் வெற்றி விழாவில் படத்தின் விநியோகஸ்தரான ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் தெரிவித்தார்.

அவர் பேசும்போது, “நாங்கள்  இதுவரையிலும் தமிழ், இந்தி என 18 படங்களை விநியோகம் செய்திருக்கிறோம். ‘கபாலி’, ‘தெறி’க்குப் பிறகு நல்ல தொடக்கமும் வசூலும் பெற்றுள்ள படம் இந்த ‘இருமுகன்’தான். எங்களது நிறுவனத்திற்கு மிகப் பெரிய வெற்றியும் இதுதான்.

தமிழ்நாட்டில் 450 தியேட்டர்களில் திரையிட்டோம். சென்னையில் மட்டும் 150 திரைகள். முதல் வாரத்திற்குள் 4.5 கோடி வசூலானது. இதுவரையிலும் தமிழ்நாட்டில் மட்டும் 29 கோடியே 25 லட்சம் வசூலாகியிருக்கிறது.  25 கோடிவரைதான் எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பாராமல் கூடுதலாகவே கிடைத்துவிட்டது. இன்னமும் வரும் அக்டோபர் 6-ம் தேதிக்குள் 50 கோடி வசூலைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கிறோம்..” என்றார்.

சியான் விக்ரமுக்கு இது நிச்சயம் ஒரு சாதனைதான்.

Our Score