சமீபத்தில் வெளியாகி ஆஸ்கர் விருதுவரையிலும் சென்ற ‘ஜெய் பீம்’ படம், இருளர் இன மக்கள் வாழ்வின் ஒரு பகுதியை காட்டியிருந்தது. தற்போது ஒரு புதிய திரைப்படம் முழுக்க, முழுக்க இருளர்கள் வாழ்வியல் பின்னணியில் உருவாகிறது.
‘இருளி’ என்ற இந்தத் திரைப்படம். இருளர்களின் வாழ்க்கை கதையில் ஒரு அருமையான காதல் படமாக உருவாகிறது.
செவ்வானம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் முருகனுக்கு இனியவன், P.ஶ்ரீராம் தேவா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இப்படத்தில் செந்தில் கணேஷ்(ராஜலஷ்மி), டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், M.S.பாஸ்கர், மனோபாலா முதலானோருடன்.. நடிப்பு(Method Acting) பயிற்சி பெற்ற மாணவர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
வரன் ஒளிப்பதிவு செய்ய இணை ஒளிப்பதிவை பிரபாகரன், பாபு உதயகுமார், ஹரி சாந்தன் செய்கின்றனர். நிர்வாக தயாரிப்பை சந்துரு செய்கிறார்.
இசையமைப்பாளர் P.B.பாலாஜியின் இசையில் அ.ப.ராசா எழுதிய பாடல் வரிகளுக்கு செந்தில் கணேஷ், ராஜலஷ்மி, முத்துச்சிற்பி, மும்பை ஹம்சிகா ஐயர், ரோஷினி, விதுயனி பரந்தாமன், சாய் சரன் முதலானோர் பாடுகிறார்கள்.
முரளிதரன் கதை எழுதியுள்ளார். இயக்குநர் மதன் கேப்ரியல் இப்படத்தை இயக்குகிறார்.
முழுக்க, முழுக்க இதுவரையிலும் தமிழ்த் திரையுலகம் கண்டிராத, இசை மற்றும் நடனம் கலந்த இருளர்கள் வாழ்வியலை இப்படம் காட்டவுள்ளது, அதனுடன் உணர்வுபூர்வமான காதல், கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த படமாக இப்படம் உருவாகவுள்ளது.
நேற்று மாசிமக பௌர்ணமி நாளில் கனடாவில் டொரொண்டோ நகரில் இந்தப் படத்திற்கான பாடல் பதிவு நடக்க, இங்கு சென்னையில் மாமல்லபுரம் கடற்கரையில் முதல்கட்ட படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.













