பொறியியல் கல்லூரியில் படிக்கும் ஒரு கல்லூரி மாணவன், எல்லோரும் மதிக்கும் வகையில் நன்முறையில் நடந்து கொள்ளும் நற்பண்புகளை கொண்டவன். காலையில் கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன், இரவில் மட்டும் திருடனாய் உலாவுகிறான். அவன் ஏன் திருடனானான்? எதற்காக திருடுகிறான் என்பதே ‘இரவும் பகலும் வரும்’ படத்தின் கதை.
இப்படத்தை ஸ்கைடாட் பிலிம்ஸ் சார்பாக பாலசுப்புரமணியம் பெரியசாமி தயாரித்துள்ளார். படத்தின் கதாநாயகனாக ‘அங்காடி தெரு’ மகேஷ், கதாநாயகியாக அனன்யா நடித்துள்ளனர். வில்லனாக ஏ.வெங்கடேஷ், மற்றும் நகைச்சுவைக்கு ஜெகன், சாமிநாதன் என பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் பாலஸ்ரீரா,ம் பிரபல இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்களிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியவர்.
“தனது குரு தன் முதல் படத்தில் நடிக்க பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்தார்…” என்கிறார் இயக்குநர். மேலும், “படத்தின் கதாநாயகியான அனன்யா கதையை சொல்லி முடித்த உடனேயே வெறும் ஒரு ரூபாயை மட்டும் அட்வான்ஸாக பெற்று கொண்டு படத்தில் நடிக்க சம்மதித்தார்…” என்று பெருமையுடன் கூறுகிறார் இயக்குனர் பாலஸ்ரீராம்.
இசை – தீனா
ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு – வி.டி.விஜயன்
நாமக்கல் மற்றும் தொட்டியத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலும், சென்னையின் முக்கிய இடங்களிலும் 50 நாட்களில் இப்படம் படமாக்கபட்டுள்ளது.