‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா(பிட்சா 2)’, ‘முண்டாசுப்பட்டி’, ‘சரபம்’, ‘எனக்குள் ஒருவன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை திருக்குமரன் எண்ட்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமார், மற்றுமொரு பிரபல தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றார்.
‘இறைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.
முதன்முறையாக விஜய் சேதுபதி, S.J.சூர்யா, பாபி சிம்ஹா ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
சென்னையில் இன்று S.J.சூர்யா, பாபி சிம்ஹா நடித்த காட்சியுடன் இந்த ‘இறைவி’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்பட்த்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.
தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் :
ஒளிப்பதிவு – ஷிவா விஜயகுமார்
இசை – சந்தோஷ் நாராயணன்
கலை – ஆர்.கே.விஜய் முருகன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்
ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீஷங்கர்
நிர்வாக தயாரிப்பு – சரவணன்
தயாரிப்பு – சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல்ராஜா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கார்த்திக் சுப்புராஜ்









