மதுரியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரித்துள்ள ‘இந்த கிரைம் தப்பில்ல’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.
இந்தப் படத்தில் நடிகர் ஆடுகளம் நரேன், சின்னத்திரை நடிகர் பாண்டி கமல் மற்றும் கதாநாயகி மேக்னா எலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். குணச்சித்திர வேடங்களில் காமெடி நடிகர் வெங்கல்ராவ், முத்துக்காளை ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
பரிமளவாசன் இசையமைத்திருக்கிறார். ஏ.எம்.எம்.கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். முன்னணி பாடகர்களான பிரசன்னா, வேல்முருகன் ஆகியோர் பாடல்களை பாடி இருக்கின்றனர்.
இத்திரைப்படத்தை இயக்குநர் தேவகுமார் எழுதி, இயக்கியிருக்கிறார்.