அனுஷ்காவுக்கு உடற்பயிற்சி நிபுணராகும் ஆர்யா

அனுஷ்காவுக்கு உடற்பயிற்சி நிபுணராகும் ஆர்யா

பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் பி.வி.பி. சினிமா தயாரிப்பில் புதுமுக இயக்குநர் K.S.பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் புதிய படம்  ‘இஞ்சி இடுப்பழகி’.

தீவிர  உடற் பயிற்சியாளர் என எல்லோராலும் போற்றப்படும் ஆர்யா இந்தப் படத்தில் நிஜமாகவே உடற் பயற்சி நிபுணராகவே நடிக்கிறார். மெல்லிய-உடலுக்கான தேடலில் இன்றைய மென்பொருள் சமூகம் எப்படி பாடுபடுகின்றது என்பதை நகைசுவையுடன் கூற வருகிறது ‘ இஞ்சி இடுப்பழகி’. 

படத்தின் கதைக்கு தேவைப்பட்ட முக்கியமான உடற் பயிற்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆர்யாவே பகிர்ந்துக் கொள்கிறார். சமீபத்தில்  சர்வதேச மிதிவண்டி பந்தயத்தில் ஆர்யாவின் வெற்றியால் ரசிகர்களது கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள ‘சைக்கிளிங்’ இப்படத்தில் முக்கியமான பங்கு வகிக்கவுள்ளது. 

இந்தப் படத்திற்காக அனுஷ்கா தன்னுடைய உடல் எடையில் 20 கிலோவை கூட்டப் போகிறாராம். இதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

காதல் மற்றும்  நகைசுவை கலந்த திரைப்படமாக உருவாகிவரும் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசையில் பழம் பெரும் இயக்குனர் கே . ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் K.S. பிரகாஷ் இயக்குகிறார்.