சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம், கே.ஞானவேல்ராஜா அவர்களின் ஸ்டுடியோ கீரின் நிறுவனத்துடன் இணைந்து ‘இன்று நேற்று நாளை’ என்ற புதிய படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பை இன்று இனிதே துவக்கியுள்ளது.
இயக்குனர் நலன் குமாரசாமியிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ரவி, இப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாகிறார்.
விஷ்ணு மற்றும் கருணாகரன் நடிக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவை அறிமுக ஒளிப்பதிவாளர் வசந்த் மேற்கொள்கிறார். இசையை ‘ஹிப் ஹாப் தமிழா’ புகழ் ஆதியும், படத் தொகுப்பை லியோ ஜான்பாலும் கவனித்து கொள்கின்றனர்.
ஒரே நிறுவனம் மிகப் பெரிய தொகையை முதலீடு செய்து ரிஸ்க் எடுப்பதைவிட இரு பெரிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தயாரித்தால் அவர்களுக்கும் நல்லதுதான்.. படங்களின் போட்டி குறைவினால் கூடுதலாக தியேட்டர்களும் கிடைக்கும்..! லாபத்திலும் பங்கு பெறலாம்..
இது போன்ற திட்டத்தை அனைத்துத் தயாரிப்பாளர்களும் பின்பற்றினால் திரையுலகத்திற்கு நல்லதுதான்..!