தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரவிக்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிப்பில் வெளியான படம் ‘இன்று நேற்று நாளை’.
படம் வெளியான நாள் முதலே வசுல் வேட்டையை தொடங்கிய இப்படம், இதுவரையிலான 3 நாட்களில் 3 கோடி ருபாயை வசுல் செய்து சாதனை புரிந்துள்ளது.
அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி நிறுவனம் சார்பாக முதலில் 150 திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் இன்னும் பல திரையரங்குகளில் கூடுதலாக வெளியாகியுள்ளது.
சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த படங்களில் ‘இன்று நேற்று நாளை’ படம் சிறந்த வசூல் துவக்கத்தை தந்த படமாக அமைந்துள்ளது. குழுந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் இப்படத்தை மிகவும் ரசித்து பார்க்கின்றனர்.
‘இன்று நேற்று நாளை’ படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்வதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.