full screen background image

நடிகர் சூர்யா, இந்தியாவின் சூப்பர் ஸ்டாரா..?

நடிகர் சூர்யா, இந்தியாவின் சூப்பர் ஸ்டாரா..?

பட்டங்களை பெற்றுக் கொள்ள உண்மையான பட்டதாரிகளைவிடவும் நடிகர்கள் அதிகம் ஆர்வமாக இருக்கிறார்கள்..!

ஏதாவது பட்டப் பெயரோடு அழைக்கப்பட்டால்தான் பின்னாளில் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் என்பதை தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்..!

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சங்கம் வளர்த்த மாமதுரையில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டத்தை ஏற்கவிருக்கிறார் இன்றைய இளைய தளபதி விஜய்..

இந்தச் செய்தி வெளியான மறுநாளே தான் இதுவரையில் சூடிக் கொண்டிருந்த ‘யங் சூப்பர் ஸ்டார்’ பட்டத்தை தியாகம் செய்வதாக அறிவித்தார் நடிகர் சிம்பு..!

இதென்னடா குழப்பம்.. என்று யோசிப்பதற்குள் அடுத்த குண்டு வெளியாகியுள்ளது.

இன்றைக்கு நடந்த ‘அஞ்சான்’ திரைப்பட விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், “சூர்யாவின் திரைப்படங்கள் தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடத்திலும் நன்றாக ஓடுகிறது. இந்தியில் சூர்யாவின் படங்களைத்தான் ரீமேக் செய்கிறார்கள்.. ஸோ.. இந்தியாவின் சூப்பர் ஸ்டாராகவும் உருமாறியிருக்கிறார் சூர்யா…” என்று குறிப்பிட்டார்.

இவருக்கு பின்பு பேசிய பிரபல பைனான்சியர்.. விநியோகஸ்தரான மதுரை அன்புவும் சூர்யாவை ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க.. ரசிகர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றார்கள். மேடையில் இருந்த மற்றவர்கள்தான் ஜெர்க் ஆனார்கள்.. நமக்கெல்லாம் இது தோணலையேன்னு நினைச்சுட்டாங்களோ என்னவோ..?

இப்படி ஆளை உசுப்பேத்தி உசுப்பேத்தியே கவுக்குறதுக்கு இவங்களுக்கெல்லாம் சலிப்பதே இல்லை.. தமிழகத்திலேயே உருப்படியான ஒரு பட்டத்தை கிரியேட் செய்து தர முடியாமல் ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னால் பாலிவுட்டில் இதைப் பார்த்து சிரிக்க மாட்டார்களா..?

மேடை பேச்சில் ‘தாட் ஸ்லிப்’ சகஜம்தான் என்றாலும் அந்த இருவரும் பேசியதில் எந்த ஸ்லிப்பும் இல்லை என்பது அவர்களது தொடர்ந்த பேச்சுக்களில் புரிந்தது..!

நடிகர் சூர்யா தன் பேச்சில் இதை மறுத்து பேசுவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பட்டை நாமம்.. ஒருவேளை மறந்துவிட்டாரோ என்னவோ..?

அமிதாப்பச்சன், ஷாரூக்கான், சல்மான்கான் ரேஞ்ச்சுக்கு தன்னை உசுப்பேற்றியதை சூர்யா எப்படி இவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை..!

யூ டூ சூர்யா என்று கேட்கத்தான் தோன்றுகிறது..!

Our Score