வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதைத்தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே லட்சியமாக கொண்டு ஒருவர் பயணித்திருக்கிறார்.
ஆம், தனிமனித எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் இவ்வுலகில், மற்றவர்களைப் பற்றி சிந்தித்ததோடு, சாதனையாளர்களை அங்கீகரித்து கெளரவிக்க வேண்டும் என்பதை சிந்தித்துக்கொண்டிருந்தவர்தான் திரு.ஜான் அமலன்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ‘இந்தியன் விருதுகள்’(INDIAN AWARDS) நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 2024, டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நிகழ்வாக, சென்னை, சேத்துபட்டில் உள்ள ‘லேடி ஆண்டாள்’ அரங்கில் நடைபெறுகிறது.
மேலும், இறந்தும் மக்கள் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நடிகரும், அரசியல் தலைவருமான திரு.விஜயகாந்த் அவர்களின் நினைவாக ‘கேப்டன் விஜயகாந்த்’ என்ற பெயரில் சினிமாத் துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
விருதுகள் வழங்குவது மட்டுமின்றி, இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்க இருக்கும் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம், இத்தகைய பணியை தமிழக அரசு வழிகாட்டுதல்படி செய்கிறது.
‘இந்தியன் விருதுகள் 2024’(INDIAN AWARDS 2024) நடைபெறும் அதே மேடையில், இந்திய அளவில் மிக முக்கியமான அழகுப் போட்டியான ’Mr Miss & Mrs தமிழகம் 2024 – சீசன் 4’ நடைபெற உள்ளது.
3-வது ஆண்டாக ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ (INDIAN MEDIA WORKS) நிறுவனம், கடந்த மூன்று வருடங்களாக ’Mr Miss & Mrs தமிழகம்’ அழகுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
விருது விழா, அழகுப் போட்டிகள் ஆகியவற்றை தனது தொலைநோக்கு பார்வையின் மூலம் வித்தியாசமாக நிகழ்த்தி மீடியா மற்றும் பொழுதுபோக்குத் துறையின் கவனம் ஈர்த்த திரு.ஜான் அமலன், அவர்கள் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளரா கவும் கால்பதிக்கிறார்.
பெண் சிங்கம் மற்றும் ஆண் சிங்கம் என்ற அர்த்தம் கொண்ட ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனத்தின் அறிமுக விழா இன்று (நவம்பர் 25) சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் தயாரிக்க இருக்கும் முதல் திரைப்படத்தைப் பற்றிய தகவல்கள் 2024, டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் நடைபெறும் ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.
விருதுக்குரியவர்களை தேர்வு செய்வதற்காக சினிமா, தொழில், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகிறவர்கள் பற்றிய மக்கள் கருத்து, அவர்கள் பற்றி சமூக வலைதளத்தளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் உள்ளிட்டவைகளை வைத்து இறுதிப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது.
விருது நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி வரும் ’இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ நிறுவனர் திரு.ஜான் அமலன், சினிமாத்துறையில் தயாரிப்பாளராக கால் பதிப்பது பற்றி கூறுகையில், “நான் கல்லூரி படிக்கும் போதே, சினிமா பிரபலங்கள் மற்றும் பிறத்துறைகளில் சாதிப்பவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அவர்களை மிகப்பெரிய அளவில் கெளரவிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
விருது விழா மற்றும் அழகுப் போட்டி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் இப்போது திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறேன். ’லையோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures) நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறேன்.
நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திற்கான கதை தேர்வில் தற்போது ஈடுபட்டுள்ளோம். எங்கள் முதல் படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை என அனைத்து தரப்பினரும் ஜாலியாக பார்க்க கூடிய பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, அனைத்து வயதினரையும் தொடர்புபடுத்தும் ஒரு திரைப்படமாகவும் இருக்கும். அப்படம் பற்றிய மற்ற தகவல்கள் இந்தியன் விருதுகள் 2024 நிகழ்ச்சி மேடையில் அறிவிக்கப்படும்.” என்றார்.









