full screen background image

கமல்ஹாசன்-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் ‘இந்தியன்-2’ திரைப்படம் துவங்கியது..!

கமல்ஹாசன்-ஷங்கர்-லைக்கா கூட்டணியில் ‘இந்தியன்-2’ திரைப்படம் துவங்கியது..!

‘2.0’ படத்திற்குப் பிறகு அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் அடுத்தப் படைப்பான ‘இந்தியன்-2’ திரைப்படம் இன்று துவங்கிவிட்டது.

1996-ம் ஆண்டு மெகா ஹிட் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் உருவான ‘இந்தியன்’ படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். மனீஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

indian-2-movie-poster-3

இத்திரைப்படம் இந்தியாவில் வேரூன்றியிருக்கும் லஞ்சம், ஊழல் பற்றி வெளிப்படையாகப் பேசியதால் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதுவரையிலான அனைத்துத் தமிழ்ப் படங்களின் வசூலையும் இத்திரைப்படம் முறியடித்தது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அனைத்துப் பாடல்களுமே இளைஞர்களை துள்ளலாக ஆட வைத்திருந்ததால் இசையிலும் இப்படம் முக்கியமான படமாகவே அமைந்துவிட்டது. இந்தியன் படத்தில் வயதான சுதந்திரப் போராட்ட வீரர் ‘சேனாபதி’ என்கிற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

indian-2-movie-poster-4

அவருடைய அற்புதமான நடிப்பிற்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் ஒருசேர கிடைத்தது. மேலும்  இந்தியன் படத்தில் சிறந்த கலை இயக்கம் செய்தமைக்காக தோட்டா தரணிக்கும், கிராபிக்ஸ் காட்சிகளை சிறப்புர செய்தமைக்காக வெங்கிக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன.

அதே ஆண்டிற்கான சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதுகளும் இந்தப் படத்திற்கே கிடைத்தது.

தமிழக அரசும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதை இத்திரைப்படத்திற்கே வழங்கியது.

அத்தோடு அந்தாண்டு அகாடமி அவார்டுகளுக்கு அனுப்பப்படும் இந்தியப் படங்களின் வரிசையிலும் இந்த ‘இந்தியன்’ இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

indian-2-movie-poster-1

இப்போது 23 ஆண்டு காலம் கழித்து மீண்டும் ‘இந்தியனின்-2-ம்’ பாகத்தைத் துவக்கியிருக்கிறார் ஷங்கர்.

‘2.0’ என்கிற மெகா ஹிட் படத்தைக் கொடுத்த கையோடு இயக்குநர் ஷங்கர் இத்திரைப்படத்தைத் துவக்குவதால், படத்திற்கு இப்போதே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்சன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிப்பதும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம்.

indian-2-movie-poster-5

சென்ற ஆண்டு வெளியான ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு பெரிய அளவிலான வசூல் கிடைக்கவில்லை என்பதால் அதிரிபுதிரி ஹிட் ஒன்றைக் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திலும் நடிகர் கமல்ஹாசன் இருப்பதால்தான், இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது போல தெரிகிறது.

மேலும் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியையும் துவக்கியிருக்கிறார் என்பதால் அடுத்த ஏப்ரல், மே மாதத்திற்குள் படத்தை ரிலீஸ் செய்துவிட்டு ஒரு மிகப் பெரிய ஹிட்டைக் கொடுத்துவிட்டு, பின்பு தேர்தல் அரசியலுக்குள் கால் வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார். அதற்கு தோதான படமாக அவர் தேர்வு செய்திருப்பது இந்த ‘இந்தியன்-2’ திரைப்படம்தான்.

indian-2-movie-poster-2

இந்தப் படத்தில் நடிகை காஜல் அகர்வால், கமலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.

தயாரிப்பு நிறுவனம் – லைகா புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – சுபாஷ்கரன், கதை, திரைக்கதை, இயக்கம் – ஷங்கர், ஒளிப்பதிவு – ரவிவர்மன், இசை – அனிருத், தயாரிப்பு வடிவமைப்பு – முத்துராஜ், படத் தொகுப்பு – Sreekar Prasad, வசனம் – ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார், சண்டை இயக்கம் – ஜாக் ஜில், பீட்டர் ஹெயின், TADO GRIFFTH, பாடல்கள் – பா.விஜய், தாமரை, விவேக், நடன இயக்கம் – பாஸ்கோ, சிறப்பு ஒப்பனை – லீகஸி எபெக்ட்ஸ், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

இந்த ‘இந்தியன்-2’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் துவங்கியது.

INDIAN 2 POOJA STILL-1

படத்தின்  பூஜையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால்,  இயக்குநர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத் தொகுப்பாளர் Sreekar Prasad, கலை இயக்குநர் முத்துராஜ், பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து மற்றும் விவேக் ஆகியோருடன் தயாரிப்பாளர்கள் K.கருணாமூர்த்தி மற்றும் A.M.ரத்னம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

Our Score