சிறந்த கதையுடனும், சிறப்பான இயக்கத்துடனும் எடுக்கப்படும் படத்தினை பார்த்தவுடன் பிடித்துதான் போகிறது. இயக்குநரை வெகுவாகப் பாராட்டிவிட்டு, நடிகர்களையும் வெகுவாக புகழ்கிறோம். கொஞ்ச நாளிலேயே அந்தப் படத்தின் கதை எங்கயோ சுட்டது என்பது தெரிந்தவுடன் நமக்கு பொசுக்கென்றாகிவிடுகிறது.
‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படம் சிறந்த நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படம். ரசித்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். நல்ல கதையாச்சே.. நமக்கு புதிய கதையாச்சே என்றெண்ணி அவருக்குத் தினமும் பாராட்டுக்களும் குவிந்தன.
‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படம் சிறந்த நகைச்சுவை கலந்த குடும்ப திரைப்படம். ரசித்து பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர். நல்ல கதையாச்சே.. நமக்கு புதிய கதையாச்சே என்றெண்ணி அவருக்குத் தினமும் பாராட்டுக்களும் குவிந்தன.
ஆனாலும் ஒரே வாரத்தில் சாயம் வெளுத்துவிட்டது. இந்த இந்தியா பாகிஸ்தான் திரைப்படம் ‘Adam’s Son Eve’s Daughter’ என்கிற ஈரான் நாட்டு படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ள விஷயம் வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டு படத்தில் ஆண், பெண் வழக்கறிஞர் ஜோடி ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் தங்களது அலுவலகத்தை அமைத்துவிட்டு வழக்கு தேடி அலையோ, அலை என்று அலைகிறார்கள் என்பதுதான் கதை. இதன் கதையையே கொஞ்சம் விரித்து அதில் கிராமத்து சப்ஜெக்ட்டையும் இணைத்து இந்தியா பாகிஸ்தானில் சூப்பராக திரைக்கதை எழுதி, இயக்கி ஜெயித்திருக்கிறார் படத்தின் இயக்குநர்.
சிறந்த இயக்குநர்தான். ஆனாலும் கதையின் இன்ஸ்பிரேஷன் இந்தப் படம்தான் என்று சொல்லி டைட்டிலில் ஒரு நன்றியை அந்த ஈரான் படத்தின் கதாசிரியருக்கு சொல்லியிருக்கலாமே..? பாதி கதையைத்தானே திருடினோம் என்று நினைத்து விட்டுவிட்டாரோ..?
நடிகர் விஜய் ஆண்ட்டனியின் முந்தைய படமான ‘சலீம்’ திரைப்படத்தின் கதைகூட ‘பிங்பாங்’ என்கிற கொரியப் படத்தின் காப்பி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது..!










